Tuesday, November 26, 2013

 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்...



அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்


ஒரு பெண் குழந்தை. ஆறாம் வகுப்பிலோ அல்லது ஏழாம் வகுப்பிலோ படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு பெற்றோர்கள் இல்லை. வளர்ப்போர் என்று ஒரு பாட்டியோ தாத்தாவோ அத்தையோ மாமாவோ இருக்கிறார்கள் கல் உடைக்கும் வேலைக்காக கும்பகோணம் அருகில் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் ஊருக்கு வருவார்கள். அந்தப் பெண்ணும் அவளது தம்பி மட்டும் பூண்டி பக்கத்தில் வசிக்கிறார்கள். வெறும் வயிற்றோடு பள்ளிக்குச் செல்வார்கள். மதிய உணவுக்கு சத்துணவு. இரவில் வந்து எதையாவது வேகவைத்து வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். பிறகு கதவைத் தாழிட்டுக் கொண்டு படுத்துக் கொள்வார்கள்.  அதைக் கதவு என்று கூட சொல்ல முடியாது. ஒரு தகரம். அவ்வளவுதான்.

பெயருக்குத்தான் பள்ளிக்கு போகிறார்கள். ENGLISH கூட வாசிக்கத் தெரியாது. உடல் சற்று உறுதியானவுடன் படிப்பை நிறுத்திவிட்டு கல் உடைக்கச் சென்றுவிடுவார்கள். அடுத்த ஓரிரு வருடங்களில் யாருக்காவது கட்டி வைத்துவிடுவார்கள். அவன் மட்டும் என்ன செய்யப் போகிறான்? ‘தன்னோடு வா’ என்று கல் உடைப்பதற்கு அழைத்துச் சென்றுவிடுவான். அவர்களின் பிள்ளைக்கும் இதே விதிதான் இம்மி பிசகாமல் எழுதப்பட்டிருக்கும். இப்படி ஒன்றில்லை மூன்று குழந்தைகள்.

ஒருநாள் இங்கே செயின்ட் சார்லஸ்லே  எங்கள் வீட்டில் வருடமுடிவு கணக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதாவது இந்த YEAR END PERFORMANCE REVIEW. ஆபீஸ் மாதிரி இல்லாமல் இது ஒருவழி அதுவும் செவி வழி வந்து எதுவும் உள்ளே நுழையாமல் தலைக்கு மேலேயே போய்கொண்டிருந்தது சரி பாட்டு நமக்குத்தான். தலைக்குமேல் போனபின் ஜான் போன என்ன ஜாக் போன என்ன என்று இருந்து கொண்டிருந்தேன். எல்லாம் முடியட்டும் எப்படியும் நாம் தப்பிக்கபோவதில்லை என்று.

கையொப்பம் இடவேண்டும் என்று வந்து நின்றவுடன் தான் தெரிந்தது எதோ சிக்கலில் இருக்கிறோம் என்று.. என்ன ஆனாலும் பரவாயில்லை என்று TERMS & CONDITIONS வழக்கம் போலவே பார்க்காமல் கையெழுத்தும் போட்டாயிற்று. நமக்கு TARGET ASSIGN பண்ணி இருக்கிறார்களாமாம். நமக்கே டார்கெட் டா ?. சரி நம்ம ஆபீஸ் ஆகட்டும் வீட்டில் ஆகட்டும் டார்கெட்க்கும் RESOURCEகும் சம்பந்தமே இருப்பதில்லை.  கழுதையை குதிரையாய் மாற சொல்லி ரேசில் ஜெயிக்கச் சொல்ற கதை தான்.  பிரதி எடுத்து FRIDGE மேலும் ஒட்டிவிட்டார்கள் எப்படியும் நமக்கு கொடுக்கப்பட்டதை முடிப்பதில்லை எனவே அதை அவ்வளவு சிரத்தை எடுத்து படிப்பதில்லை எனவே வழக்கம் போல் கண்டுகொள்ளவில்லை.

கீழே அம்மணியின் டார்கெட் ரொம்பவும் சின்னதாக இருந்தது. என்ன்னவென்று படித்துதான் பார்ப்போமே என்று பார்த்தால் பகீரென்று சிரிப்பு வந்து விட்டது. அம்மணியாவது இதை எல்லாம் செய்வதாவது. பார்க்கலாம். ஊரில் போய் பார்த்துகொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். இந்தியா செல்ல AIR இந்திய  விமானம்  ஏறியாகிவிட்டது. TRAY TABLE எல்லாம் துடைத்து முடித்து மகன் ஒன்றில் ஏறி குதித்து ஒன்றை உடைத்தும் விட்டான்.

பாகப்பிரிவினை ஆரம்பித்தது. ஒன்றும் இல்லை. அவரவர் BUDGET எவ்வளவு என்றுதான். அப்படி இப்படி என்று ஒருவழியாக ஊர் போய் சேருவதற்குள் முடிவாகி (அடி வாங்கதகுறையாக - வேற யாருக்கு நமக்குத்தான்  ) சென்னை சேர்த்தோம். அவரவர் ஊருக்கு போகும்போது என் ஷேர் எல்லாம் CASHஆக வேண்டும் என்றார்கள். நம்ம ஊரில் எந்த ATM லே ஒரே நாளில் சில லட்சம்கள் எடுக்க விடுகிறார்கள். எப்படியோ அக்கா அப்பா கிட்டே வங்கி கார்டு கடன் வாங்கி எடுத்து கொடுத்து என் வழி தனி வழி என்று ஜீ டிவி ஆபீசில் தஞ்சம் புகுந்தேன்.

ஆனாலும் ஒரு கேள்வி மட்டும் மண்டையை குடைந்து கொண்டிருந்தது.எதற்காக இவ்வளவு பணம் அவளுக்கு தேவையை இருக்கிறது ? ஒருநாள் அதற்க்கு விடை கிடைத்தது.அம்மணி இதற்குமேல என் அன்பு கண்மணி 3 குழந்தைகளை SPONSOR செய்கிறார்கள் என்று. அதுவும் யார் என்றே தெரியாத பார்த்து கூட இல்லாத குழந்தைகளை.   மேலே முதல் பாராவில் கூறிய படியான அளவில் இருக்கும் குழந்தைகள் அவர்களின் பள்ளி படிப்பு முடியும் வரை எல்லா செலவுகளையும் எற்றுகொண்டிருக்கிறார்கள். எல்லாம் பெண் குழந்தைகள். இதில் பசங்க என்ன பொண்ணு என்ன வேறுபாடு.. எல்லாம் ஒன்று தான். அந்த குழந்தைகள் எழுதிய கடிதங்கள் ஒன்றும் கண்ணீர் காவியம்.

என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவளது ACHIEVEMENTS இந்த வருடம் பூர்த்தியாகிவிட்டது. அந்த குழந்தைகளின் உயர்நிலை பள்ளி முடியும்வரை அவர்களது செலவுகளுக்கு பணம் ஒதுக்கி ஒருபகுதி அனுப்பியாகிவிட்டது.

பாரதியை எவ்வளவோ படித்திருக்கிறோம்.. பிடித்து இருக்கிறோமா என்று சிந்திக்கும் நேரம் இது. சென்னையில் கான்வென்ட்டில்  படித்தவர்கள் கிராமத்தவர்கள் போல் உயரிய விழுமங்களுடன் வளருவதில்லை என நினைத்துக்கொண்டிருந்தேன் இப்படி குருட்டுத்தனமாக நாம் எதையாவது நினைத்துக் கொண்டிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் அந்த நினைப்பு தவிடு பொடியாகிவிடுமல்லவா? அப்படித்தான் நடந்தது. உன்னை அடைய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

என்ன தவம் செய்தேனோ யான் உன்னை பெற -

ஹ்ம்ம்.... வழக்கம் போல இந்த வருடமும் நம்மக்கு TOP PERFORMER AWARD கிடைக்கப்போவதில்லை.

DEAR FRIENDS நீங்களும் இது மாதிரி பண்ணலாம் இந்த ORGANIZATION ரொம்ப நல்ல SERVICE பண்றாங்க...

மேலும் விபரங்களுக்கு

http://vazhai.org/




Sunday, November 20, 2005

 

ME TOO...





'ஏன் நீங்க ஊருக்குப் போக முடிவு செஞ்சீங்க?' என்று கேட்ட என் அமெரிக்கத் தோழரிடம் அருமையாக விளக்கம் கொடுப்பதாக நினைத்து ஒரு உவமை சொல்லியிருந்தேன். திருமணத்துக்கு முன்பே அமெரிக்கா வந்து, பிறகு விடுமுறையில் ஊருக்குப் போய் துணையுடன் திரும்பி, சில வருடம் ஊர்சுற்றி, பிறகு குழந்தை பெற்று பெற்றோரை அழைத்து சில மாதம் தங்களுடன் வைத்து பெருமைப்பட்டு, தனி வீடு, இரு கார்கள் என்று வளரும் குடும்பங்களிலிருந்து பெரிதும் வேறுபட்ட எங்கள் அமெரிக்க வாசத்தை, 'மரத்தைப் பிடுங்கி நடுவ'தைப் போல சிரமமானது.....

அதன் உண்மையான அர்த்தம் இப்போது நன்றாகவே விளங்குகிறது. அதன் சொந்த மண்ணிலேயே மறுபடியும் நடப்பட்டாலும், பிடுங்கப்பட்ட மரம் மீண்டும் பழைய நிலைக்கு வருவதன் சிரமங்களை இப்போது உணர்ந்துகொண்டிருக்கிறேன். ஆனால் வேண்டி ஏற்றுக்கொண்ட மாற்றமானதால் வலிமைக்குக் குறைவில்லை. இன்னும் சில வாரங்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை வர இரண்டு வாரம் ஆகிவிட்டது.

குழந்தைகளின் பள்ளி ஏற்பாடுகள், அடுக்கி வைக்கப்பட்ட தூசி படிந்த பொருட்களாலான வசிப்பிடத்தை சரிப்படுத்தல், வரிசையாக வருகைதரும் நண்பர்கள்/உறவினர்கள், கார் வாங்குதல்... இவற்றோடு இரண்டு புதுமனைபுகுவிழாக்கள், இரண்டு பூப்புநன்னீராட்டுவிழாக்கள், துக்கம் விசாரிப்புகள், மருத்துவமனையில் படுத்துள்ள உறவினருக்கு ஆறுதல் என நேரம் பறக்கிறது.

இதற்கிடையில் ஒருவழியாக பி எஸ் என் எல் அகலப்பாட்டை இணையத்தொடர்பும் விண்ணப்பித்து, அதுவும் இன்று வந்துவிட்டது. இடையிடையே சில நிமிடங்கள் தமிழ்மணம் மேய்ந்ததோடு சரி.

This page is powered by Blogger. Isn't yours?